Loading...
வாழை இலைகள் இந்தோனேஷியா, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்த வாழை இலைகளை இப்பொழுது எல்லாம் நாம் எங்கும் காண முடியும்.
அந்தளவுக்கு அதன் பயன் பரந்து விரிந்து கிடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வாழை மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது.
Loading...
பொதுவாக வாழை இலைகள் உணவு சாப்பிடுவதற்கு, மருந்தாக, உடல் நல சிகச்சைக்கு, பூஜை படையலுக்கு இப்படி நிறைய பயன்களை தருகிறது.
இந்த வாழை இலை நமது கூந்தல் பராமரிப்பிலும் பயன்படுவது நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு
- வாழை இலை நமது தலையில் உள்ள பொடுகை போக்குகிறது. இந்த பொடுகுத் தொல்லை யால் முடி உதிர்தல், தலையில் அரிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
- எனவே இந்த பிரச்சினைகளை போக்கி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- மேலும் இதிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அலன்டோயின் பொருட்கள் கூந்தலுக்கு நல்ல நிறத்தை தருகிறது. வாழை இலை சாற்றை எடுத்து தலையில் மாஸ்க் போட்டு வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
Loading...