அயனாவரத்தில் உள்ள சீனிவாசா டூர் ஆபரேட்டர்ஸ் உரிமையாளர் சேஷாத்திரி கூறியதாவது: அயனாவரத்தில் கடந்த 12 வருடங்களாக சுற்றுலா துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற சீனிவாசா டூர் ஆபரேட்டர்ஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த வருடத்தில், இன்ப சுற்றுலாக்களான கேரளாவிலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, மூணாறு, தேக்கடி, ஆலப்புழா படகு இல்லம் மற்றும் ெகாச்சின் கடற்பகுதிகள் அடங்கிய 7 நாட்கள் இன்ப சுற்றுலா.
வட இந்தியாவின் குளுகுளு பிரதேசங்களை கொண்ட சிம்லா, குலுமணாலி, ஆக்ரா, அமிர்தசரஸ் (பொற்கோயில்), இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி (வாகா பார்டர்), குருஷேத்திரா, டெல்லி உட்பட 14 நாட்கள் குளுகுளு இன்ப சுற்றுலா. ஆன்மிக சுற்றுலாக்களான ஷீரடி சாய்பாபா யாத்திரையில் அவுரங்காபாத் (எல்லோரா குகை மற்றும் குஸ்நேஸ்வரர் ஜோதிர்லிங்கம்), ஷீரடி சாய்பாபா தரிசனம், சனிசிங்கனாப்பூர் சனிபகவான் கோயில், பண்டரிபுரம் (பாண்டுரங்கன் கோயில்) மற்றும் மந்திராலயம் ராகவேந்திரா பகவான் தரிசனங்களை உள்ளடக்கிய 6 நாட்கள் சுற்றுலா.
புண்ணிய யாத்திரைகளான காசி, கயா, கல்கத்தா காளி கோயில், அலகாபாத் திரிவேணி சங்கமம் (கங்கா, யமுனா, சரஸ்வதி) மற்றும் ஆக்ரா, டெல்லி நகரங்களை கொண்ட 11 நாட்கள் ஆன்மிக யாத்திரை. இலங்கை ராமாயண யாத்திரையில் முனீஸ்வரம், திருகேடீஸ்வரம், யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, தம்பூலா, கண்டி, நுவரலியா, கதிர்காமம் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களை உள்ளடக்கிய 9 நாட்கள் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கும், குறைந்த செலவில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.