கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் ஸ்ரீரஞ்சனி. சீரியல் நடிகர் அமித் பார்கவ்வின் மனைவி இவர் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும்.
அண்மையில் பரவலாக பேசப்பட்டு வரும் #MeToo ல் பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை எடுத்து வைத்து வருகிறார்கள். இதில் ஸ்ரீரஞ்சினியும் நடிகர் ஜான் விஜய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.
இந்நிலையில் சின்மயி, லீனா மணிமேகமலை, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ ரஞ்சனி பேசினார்.
இதில் அவர் ஜான் விஜய் எனக்கு கொடுத்த பாலியல் புகார் குறித்து அவரது மனைவி எனக்கு அலைபேசி மூலம் அழைத்தார். நடந்தவை குறித்து கேட்டார். பின் உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கேரினார். அவருக்கு என் நன்றிகள் என ஸ்ரீரஞ்சினி கூறியுள்ளார்.