21-10-2018 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 4-ம் நாள். துவாதசி திதி. இரவு 9.15 வரை. பிறகு சதயம் நட்சத்திரம் காலை 8.01 முதல். யோகம்: சித்த யோகம்.
நல்ல நேரம் 7-10, 11-12, 2-4, 6-7, 9-11.
எமகண்டம் மதியம் மணி 12.00-1.30.
இராகு காலம் மாலை மணி 4.30-6.00.
குளிகை: 3:00 – 4:30.
சூலம்: மேற்கு.
பொது: திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சனேயருக்குத் திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளல்.
பரிகாரம்: வெல்லம்.
மேஷம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மிதுனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
கடகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும்.
வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
சிம்மம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.
கன்னி
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
துலாம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.
விருச்சிகம்
எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
தனுசு
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
மீனம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்