Loading...
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கடந்த 31 வருடங்களுக்கு முன்னர் இந்திய இராணுவத்தால் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், நோயாளிகள் எனப் பலரும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...
Loading...