இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதில் ஐயப்ப சுவாமியும் விதிவிலக்கல்ல.
அக்கோயிலின் புராணக்கதைபடி, ஐயப்ப சுவாமி பிரம்மச்சரியம் எடுத்துக் கொண்டு துறவி வாழ்க்கை வாழ உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இதனை சுற்றி பல கதைகள் உள்ளன.
இரண்டு ஆண் கடவுள்களுக்கு ஐயப்பன் பிறந்தார் என்றும் இதனால் பெற்ற சக்தியில் அதுவரை வீழ்த்த முடியாத ஒரு பெண் அரக்கியை வீழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது.
வீழ்த்திய பிறகுதான் அவர் ஒரு இளம்பெண் என்றும், அரக்கியாக வாழ அவருக்கு சாபம் கொடுக்கப்பட்டது என்றும் தெரிய வந்தது.
உடனே ஐயப்பன் மீது காதல் வயப்பட்ட அப்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். காட்டுக்குள் சென்று பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பதுதான் தன் விதியில் எழுதப்பட்டிருப்பதாக கூறி ஐயப்பன் மறுத்துவிட்டார்.
ஆனால் அப்பெண் விடாப்படியாக கேட்க, என் ஆசீர்வாதம் பெற புதிய பக்தர்கள் என்று வராமல் இருக்கிறார்களோ, அன்று திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஐயப்பன் கூறியிருக்கிறார். அந்த நாள் வரவேயில்லை.
சபரிமலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள இரண்டாவது கோயிலில் அப்பெண் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு கோயில்களுக்கும் பெண்கள் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் அது இரு கடவுள்களையும் மற்றும் ஐயப்ப சுவாமியை காதலித்த பெண்ணின் தியாகத்தையும் அவமதிப்பது போல ஆகிவிடும் என்று நம்பப்படுகிறது.
மற்றொரு கதைபடி, அரபு நாட்டில் இருந்து படையெடுத்து வந்த வவர் என்பவரிடம் இருந்து ராஜ்ஜியத்தை காப்பாற்றியது அரசராக இருந்த ஐயப்பன் என்று கூறப்படுகிறது.
போரையடுத்து அரசரின் பக்தராக வவர் மாறிவிட்டார் – சபரிமலை அருகில் இவருக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம் இருக்கிறது. சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமியிடம் ஆசி வாங்க வருபவர்களை இவர் பாதுகாக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட கதையின்படி, மேலும், பெண்கள் உள்ளிட்ட உலகின் பிற ஆசைகளையும் இவர் தவிர்த்து, தன்னிடம் வரும் ஒவ்வொரு பக்தரின் பிரார்த்தனைக்கும் பதிலளிப்பதாக ஐயப்பன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆகவேதான் பெண்கள் இந்த கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.