வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த நீரில் மூழ்கி மரணமான மாணவனின் இறுதிக்கிரி நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த மாணவனின் இறுதி கிரியை இன்று காலை மாணவனின் இல்லத்தில் நடைபெற்று பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிவகுப்புடன் பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்திற்கு சடலம் எடுத்து சென்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்ற பின்னர் பூம்புகார் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது அப்பாடசாலை சமூகத்தை மட்டுமல்லாது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தேவகுமார் அனோஜன் என்ற 14 வயது சிறுவன் கடந்த (19.10) மாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வைரவ மூன்று முறிப்பு குளத்திற்கு சென்ற போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமாகியுள்ளார்.