பிரபல நடிகை ஒருவர் ‘கெட்டவன்’ என சிம்புவின் நடித்த படத்தின் பெயரை கூறி, மீடூ என பதிவிட்டுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை இளம் நடிகர்களில் பலருக்கும் பிடித்தவர் நடிகர் சிம்பு. இதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தன்னுடைய மனதில் பட்டத்தை வெளிப்படையாக கூறுவார்.
ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் காதல் சர்ச்சையில் சிக்கிய இவர், தற்போது மீடூ சர்ச்சையில் சிக்கியுள்ளது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேகா டுவிட்
வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்த லேகா வாஷிங்டன், தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று மீ டூ டாக்கில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு கடந்த வருடம் தான் டை பார்ட்னர் ஷிப் என்கிற திருமணம் வாழ்வில் இணைந்தார்.
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் குறிப்பிட்டவர் நடிகர் சிம்பு என பலர் கூறி வந்தாலும், இது தற்போது வரை உதுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த சர்ச்சை வந்தாலும் மனம் தளராமல் அதனை எதிர்கொள்ளும் சிம்பு கண்டிப்பாக பதில் கொடுப்பர் என சிம்பு ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
One word : Kettavan. #metoo
— lekha washington (@washingtonlekha) October 21, 2018