நடிகர் விஷால் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூரி கலந்து கொண்டு ஒரு சிறுமியின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார்.
இந்தியாவில் குடும்பஸ்தர் ஒருவர் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் போது கிணற்றில் விழுந்து கால், கை முறிந்த நிலையில் படுக்கையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அந்த அதிர்ச்சியில் அவரின் மனைவியும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களை முழு நேரமும் அவர்களின் மகளான சிறுமி ஒருவர் கவனித்து வந்துள்ளார்
ஒரு நாளைக்கு வெறும் 4 மணி நேரம் மாத்திரமே குறித்த சிறுமி ஓய்வு எடுத்துள்ளார். பெற்றோருக்காக இரவு, பகல் பாராது கண் விழித்து வேலை செய்துள்ளார்
இதனை அறிந்த நடிகர் விஷால் அவரின் நிகழ்ச்சியின் மூலம் உதவி செய்ய முற்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி கலந்து கொண்டு பராட்டா விற்று பணம் சம்பாதித்துள்ளார்
குறித்த பணத்தை சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவ ரசிகர்கள் நடிகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண் எனக்கு அண்ணா இருந்திருந்தால் கூட உங்களை போல இருக்க மாட்டார் என்று சூரியிடம் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். குடும்பமே மேடையில் கதறி அழுதுள்ளனர். நடிகர் சூரியும் கண்ணீருடன் அவர்களுக்கு ஆருதல் கூறியுள்ளார்.