செம்பருத்தி நாடகத்தில் புகழ் தொட்ட நடிகை பிரியா ராமனுக்கு இன்று பிரபல தொலைக்காட்சியில் சிறந்த அம்மாவிற்கான விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை அவரின் கணவர் நடிகர் ரஞ்சித் வழங்கி வைத்துள்ளார்.
விருது வழங்குவதற்கு முன்னர் அவரின் கணவரான நடிகர் ரஞ்சித் கலைஞராக வாழ்த்துவதை விட ஒரு கணவராக வாழ்த்துவதில் மிகவும் பெருமையடைகிறேன்
அவர் வீட்டிலும் மிக சிறந்த அம்மா, இந்த விருதினை நான் வழங்குவதில் மிக பெருமை கொள்ளுகின்றேன் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, மனைவியான பிரியா ராமனுக்கு மேடையில் பூ கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டும் இல்லை இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஒரு கால கட்டத்தில் பிரிந்தும் வாழ்ந்தனர். பின்னர் மீண்டும் இருவரும் இணைந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை கொடுத்துள்ளனர்.
இந்த தருணத்தை பார்த்த அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அது மட்டும் இல்லை, மேடையில் நடிகை பிரியா ராமன் கண்ணீர் சிந்தியுள்ளார்.