22-10-2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 5-ம் நாள். திரையோதசி திதி இரவு 10.22 வரை. பிறகு பூரட்டாதி நட்சத்திரம் காலை 08.07 முதல். யோகம்: மரண-சித்த யோகம்.
நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00
குளிகை: 1:30 – 3:00.
சூலம்: கிழக்கு.
பொது: பிரதோஷம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
பரிகாரம்: தயிர்.
மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.
வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.
ரிஷபம்
சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.
வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
மிதுனம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
சிம்மம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.
வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.
கன்னி
உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது நட்பு மலரும்.
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
துலாம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும்.
வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
விருச்சிகம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உற்சாகமான நாள்.
மீனம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.
வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.