பேருந்துகள் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகள் திடீரென மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 40 ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதினால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.