Loading...
கோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி என்பவற்றின்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு உந்துருளியில் வருகை தந்த ஐந்து பேரே இத்தாக்குதலிலை மேற்கொண்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
Loading...
இச்சம்பவம் நேற்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
ஸ்தலத்திற்கு கோப்பாய் மற்றும் சுன்னாகம் காவல்துறையினர் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...