தற்போது சமூகவலைதளம் முழுக்க Me too பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதில் சினிமாவை சேர்ந்த பலர் பாலியல் புகார் அளித்துள்ளார்கள். தற்போது இளையதளபதி சீரியலில் நடித்து வரும் சஞ்சனா கல்ராணி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி விரிவாக கூறியுள்ளார்.
இதில் தனக்கு 16 வயது இருக்கும் போது கண்டா கண்டாய்தி என்ற படத்தில் நடித்த போது படத்தில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கினார்கள்.
பாங்காக்கில் இதன் படப்பிடிப்பு அழைத்து சென்று என் தாய் மற்றும் பலரை அங்கிருந்து போக செய்துவிட்டார்கள். என் தாய் கண்கலங்கிய நிலையில் ஒண்ணும் நடக்காது தைரியமாக இரு என கூறிவிட்டு போய்விட்டார்.
அந்த காட்சியில் நான் சரியாக நடிக்கவில்லை கூறி மிரட்டி 50 முறை முத்தம் கொடுக்க வைத்தார்கள். தப்பு நடக்கிறது என தெரிந்தும் என்னால் தடுக்க முடியவில்லை. உள்ளுக்குள்ளே அழுதேன்.
ஆனால் அவர்கள் இந்த காட்சியால் படம் ஜெயிக்கும். நீயும் பெரிய இடத்துக்கு வருவாய் என கூறினார்கள். வெளியே சொல்ல தயங்கிய போது என் அம்மா தான் தைரியமாக இரு கூறி தற்கொலைக்கு முயன்ற என்னை தடுத்தார். ஆனால் இந்த காட்சியை தணிக்கைகுழு அனுமதிக்க வில்லை என கூறியுள்ளார் சஞ்சனா கல்ராணி.
பிரபல இளம் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது.