Loading...
யாழில் சற்று முன்னர் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவித்துள்ளார்.
ஓட்டமடம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.கோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பம் தொடர்பிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...