இங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை சகலதுறை வீரரான திஸர பெரேரா வழிநடத்தவுள்ளார்.
இந்தப்போட்டி உட்பட இந்த தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்தப்போட்டி இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இந்தப்போட்டிக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் சகலதுறை வீரரான திஸர பெரேரா இலங்கை அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
இளம் வீரரான கமிந்து மென்டிஸுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.