மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பாடசாலை ஒன்றின் தரம் 4ம் ஆண்டு கல்வி கற்றுவரும் 9 வயது சிறுமி சம்பவதினமான கடந்த 19 ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்று பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள குறித்த தேனீர்கடைக்கு சிற்றுண்டி வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது கடையில் யாருமில்லாததையடுத்து கடை முதலாளி அச்சிறுமியை கடையின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட் சிறுமி தனது தாயிடம் தனக்கு நோர்ந்த கதி குறித்து தெரியப்படுத்தியதையடுத்து பெற்றோர் பாடசாலை அதிபர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் நேற்று (22) முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த கடை முதலாளியை கைது செய்யப்பட்டார்.
இதேவேளை இதில் கைது செய்யப்பட்ட கடை முதலாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.