ஐநா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காணப்படும் பிரேரணைகளை நீக்கிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தான் ஆதரவு வழங்கப் போவதில்லையென மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை வெற்றி கொள்ள முடியாது.
இந்த பிரேரணைகளை நீக்கிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அரசின் நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவை விலக்க வேண்டி வரும் என அவர் கூறியுள்ளார்.