பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி தனது திருமண அழைப்பிதழை டிஸ்னி ஸ்டைலில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,கிடாரி, வாடீல் ஆகிய படங்களில் நடித்த நடிகை சுஜா வருணி, பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக களமிரங்கினார்.இந்நிலையில் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாக்குமாரும்-நடிகை சுஜா வருணியும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து நடிகை சுஜாவருணியின் பிறந்த நாளானன்று அவரது காதலர் திருமண தேதியை வெளியிட்டிருந்தார். அதில், 11 வருடக் காதல் இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது.
நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த பிறந்தநாளில் இதை சொல்லிக் கொள்கிறேன். சாகும் வரைக்கும் பிரியாமல், அன்புடன் இருப்போம்’ என்று சிவாஜி தேவ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது இவர்களது திருமண அழைப்பிதழை இருவரும் வெளியிட்டுள்ளனர்.அதில் சுஜா வருணி மற்றும் அவரது காதலர் சிவகுமார் இருவரும் வெளியிட்ட அழைப்பிதலில் டிஸ்னி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களது காதல் கதை, டிஸ்னி கதைகளில் வருவது போல் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு பத்திரிக்கை எதோ கார்ட்டுன் படத்தில் வருவதை போல உள்ளது ஆனால் இதுவும் வித்தியசமான ஒரு அழைப்பிதலாகும்.இந்த ஜோடிகள் வாழ வாழ்த்துவோம்.