தங்கத்தைக் காட்டிலும் விலை மதிப்புள்ளதாகவும், ஆசிய மண்டலத்தில் விளையும், “இமயமலை வயாக்ரா” என்று அழைக்கப்படும் காளான் வகை செடிக்கு பருவநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் “நேஷனல் அகாடெமி ஆப் சயின்ஸ்” வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இது கூறப்பட்டு இருக்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராரிசிரியர் ஹோப்பிங்தலைமையில் ஆய்வாளர்கள் குழு அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக வெப்பநிலை உயர்வால் வயாக்ரா விளைச்சலுக்கான சரியான காலநிலை இமயமலைப்பகுதியில் இல்லை. இதனால் இதன் விளைச்சல் குறைந்துள்ளது.
இமயமலைப்பகுதியில் வசிக்கும் மக்களும் இந்த வயாக்ரா பயிரிட்டு வருமானம் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் தற்போது வயக்ரா விளைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. இவர்கள் பிழைப்புக்காக வேறு வேலையைத் தேடிவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இமலைப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டுக்குப்பின் காலநிலையில் தொடர்ந்துமாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் வெப்பநிலையில் படிப்படியாக உயர்ந்து வருவது ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலை வயாக்ரா தற்போது அழிவை நோக்கிச்சென்று வருகிறது என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.