Loading...
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை அரசியலமைப்புச் சபை கூடவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகத்தில் நாளை பிற்பகல் 1 மணியளவில் கூடவுள்ள இவ் அரசியலமைப்பு சபையில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading...
எதிர்வரும் 27 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். எனவே அதற்கு முன்னர் பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட சிவில் பிரதிநிகளின் நியமனத்துக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சந்திப்பு இடம்பெறவுள்ளது
Loading...