Loading...
இன்றைய தினம் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையுடன் தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
Loading...
இதனால் தொதுருஓயாவிற்கு அருகில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் கோரியுள்ளது.
இதனுடன் பெய்து வரும் மழையால் பொலன்னறுவை – பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டமும் அதிகித்திருப்பதால் அதன் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
Loading...