சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் தமிழ் பெண் பவித்ரா தர்பூசணி பழத்தை வைத்து மானத்தை மறைத்த கொடுமை நடந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி புதுப்பொலிவு பெற்ற பிறகு அதில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் 10 மாடல் அழகிகள் கலந்து கொண்டுள்ள சொப்பன சுந்தரி நிகழ்ச்சியும் ஒன்றாகும். மாடல் அழகிகளுக்கு மென்டராக நடிகைகள் பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால் உள்ளனர்.
பழங்கள்
சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள், பழங்களை வைத்து அழகிகள் போஸ் கொடுத்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. அதில் தமிழ் பெண்ணான பவித்ரா தர்பூசணியை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த போஸ் ரசிக்கும்படி இல்லை என்பதே வேதனை.
மாடல் அழகிகள்
உடல் மீது பால், பீர், தேன் உள்ளிட்டவற்றை ஊற்றிக் கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர் மாடல் அழகிகள். கலாச்சாரம், கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் தமிழ்நாட்டில் இப்படியொரு ஆபாச நிகழ்ச்சியா?
This Sunday “Food Photography” On Soppana Sundari!!
Watch #SoppanaSundari Saturday & Sunday 9:00 PM on #SunLife #PudhuSunLife #SunLife #SoppanaSundari #SoppanaSundariOnSunLife pic.twitter.com/IFZ36sY0Z3
— Sun Life (@SunLifeTamil) October 20, 2018
பிரசன்னா
அந்த ஆபாச புகைப்படங்களை போட்டுக் காட்ட அதை பார்த்து க்யூட், அழகு, ஸ்வீட் என்று நடிகைகள் பார்வதி நாயரும், சாக்ஷி அகர்வாலும் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்க வேண்டுமா பிரசன்னா?… என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது
பயம்
அலுவலகத்தில் சொப்பன சுந்தரி ப்ரொமோ வீடியோ அல்லது புகைப்படங்களை பார்க்க பயமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அலுவலகத்தில் ஆபாச படம் பார்க்கிறார்கள் என்று சக ஊழியர்கள் நினைக்கும் அளவுக்கு உள்ளது ப்ரொமோ வீடியோக்கள்.