கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துகள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஒரு கொய்யாப் பழம் சாப்பிட்டால் ஒரு பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்..
கொய்யாப்பழத்தில் தாது உப்புகள் அடங்கியுள்ளன.
கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத, வைட்டமின் சி உயிர்ச்சத்து இதில் அதிகம் உள்ளது.
அதனால், வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை போய்விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் இப்பழம் உதவும். கொய்யாவை தோலுடன் சாப்பிடும் போது முகத்திற்கு பொலிவையும், அழகையும் தரும்.
கொய்யாப்பழத்தை கழுவிய பிறகு, பற்களால் கடித்து மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.