25-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 8ம் திகதி, ஸபர் 15ம் திகதி, 25-10-2018 வியாழக்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 10:34 வரை; அதன் பின் துவிதியை திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:29 வரை;
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : சித்திரை
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.
மேஷம்:
குடும்பத்தினர் உங்களின் பணித்திறமையை பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை நிலைத்திருக்கும்.
ரிஷபம்:
நண்பரின் குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவைப்படும். லாபம் சுமார். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.
மிதுனம்:
மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.
கடகம்:
கடந்த கால முயற்சிக்கான நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். உறவினரின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும்.
சிம்மம்:
சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.v
கன்னி:
எண்ணத்திலும், செயலிலும் முரண்பாடு ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தினர் ஆதரவாக நடந்து கொள்வர்.
துலாம்:
எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். நண்பரால் உதவி உண்டு.
விருச்சிகம்:
சமூக அக்கறையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.
தனுசு:
சிலரது பேச்சு மனதிற்கு வருத்தம் தரலாம். அதிக உழைப்பினால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றவும். நேரத்திற்கு உண்பது நல்லது.
மகரம்:
யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். சுமாரான அளவில் லாபம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டாம்.
கும்பம்:
உங்களின் திறமைமிகு பணி பாராட்டு பெறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
மீனம்:
முழுமனதுடன் பணிபுரிவதால் உரிய நன்மை கிடைக்கும்.தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும்.அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.தெய்வ வழிபாடு செய்வதால் மனதில் சாந்தம் உருவாகும்.