2018 / 2019 ஆண்டின் சிவனொலிபாதமலை பருவகாலம் சிவனடிபாதமலை புனித பூமியில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கில் சகல யாத்திரிகளையும் வருகை தருமாறு நுவரெலியா மாவட்ட அரச அதிபர் ரோகன புஷ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்முறை சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பமாவதையொட்டி கலந்துரையாடல் ஒன்றில் நல்லத்தண்ணி நகரின் பொது சுகாதார அதிகாரிகளின் கேட்போர் கூடத்தில் பொது சுகாதார அதிகாரிகள் , நல்லத்தண்ணி பொலிஸார், தேசிய நீர் வடிகால் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு உரையாற்றிய அரச அதிபர், இம்முறை டிசம்பர் மாதம் வரும் பௌர்ணமி தினமான 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டவுள்ள சிவனொலிபாதமலை பருவகாலமானது அடுத்த வருட வெசாக் தினத்துடன் நிறைவு பெறவுள்ளது.
அதன் நிமித்தம் இம்முறை சிவனொலிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகளிடம் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தவும் அதை தவிர்த்து கொண்டு செல்லும் பொருட்களை வன பிரதேசத்தில் வீசாமல் மலையில் இருந்து கீழ் பகுதியில் உள்ள பிரதேச சபையிடம் ஒப்படைக்கும் வேலைத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலாகவே 2 மாதங்களுக்கு முன்பதாக இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய பட்டதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,சகல வேலைத்திட்டங்களையும் மஸ்கெலியா பிரதேச சபை, பொலிஸார்,பொது சுகாதார அதிகாரிகள் , அரச அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.