கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விமானத்தின் இறக்கை மீது நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்தவர் ஒரு ரப் பாடகர் என தெரிவிக்கப்படுகின்றது.
Jon James McMurray (34) என்னும் அந்த ரப் பாடகர் தனது இசை ஆல்பத்திற்காக விமானத்தின் இறக்கை மீது நின்றபடி சாகசம் ஒன்றில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.
விமானத்தின் இறக்கையின் ஓரத்திற்கே அவர் சென்றுவிட்டதால் விமானம் நிலைதடுமாறி தலை குப்புற விழத்தொடங்கியது.
அந்த சம்பவத்தில் விமானத்திலிருந்து விழுந்த Jon James, விமானத்திற்கும் தரைக்கும் நடுவில் குறைவான தூரமே இருந்ததால் தனது பரசூட்டை விரிக்க நேரமின்றி வயல் ஒன்றில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால் சமாளித்துக் கொண்ட விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கி விட்டதால் உயிர் தப்பியுள்ளார்.