வடக்கு கரோலினா பகுதியில் உணவகம் ஒன்றில் வேலைபார்க்கும் மாணவிக்கு 17இலட்சம் இலங்கை ரூபா டிப்ஸ் கிடைத்துள்ளது.
சினிமா பிரபலங்களற்கு ஈடாக சமூக வலைத்தளங்களின் வழியாக பிரபலமானவர்களும் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் Mr Beast. யூடியுப் வாயிலாக உலகப்புகழ் பெற்றவர். தொடர்ச்சியான வீடியோக்களால் பல கோடி ரசிகர்களை வைத்திருக்கிறார்.
இவர் கடந்த ஞாயிறு அன்று வடக்கு கரோலினாவில் உள்ள Sup Dogs உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பரிமாறுனராக வேலைப்பார்க்கும் கஸ்டர் என்பவரிடம் 2 தண்ணீர் போத்தல்களை ஓர்டர் செய்துள்ளார். பின்னர் ஹோட்டலை விட்டு வெளியேறுகையில் தான் வாங்கிய தண்ணீர் போத்தல்களிற்காக 10,000 அமெரிக்க டொலர்களை மேசையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
அதாவது இன்றைய பெறுமதியில் 1728500.00 இலங்கை ரூபாய்களை, வெறும் இரண்டு தண்ணீர் போத்தல்களிற்காக கொடுத்து விட்டு போயிருக்கிறார் மனுசன்!
Sup Dogs விதிமுறையின்படி, வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தில் பொருளின் பெறுமதி தவிர, மிகுதிப் பணம், அவரை உபசரித்த பரிமாறுனருக்கே செல்லும்.
இரண்டு தண்ணீர் போத்தல்களின் சில்லறை விலை கழிந்து, 17 இலட்சம் இலங்கை ரூபா கஸ்டருக்கு கிடைத்தது!
ஆரம்பத்தில் இது போலியான பணமாக இருக்கலாம், தன்னை ஏமாற்ற யாரோ இவ்வாறு செய்திருக்கலாம் என எண்ணிய கஸ்டர், பின்னர் இது தனக்கான பணம் என்பதினை அறிந்து இன்ப அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவத்தை, Sup Dogs முகப்புத்தகத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளது.
“எனது கல்லூரி படிப்பின் செலவிற்காகவே Sup Dogs-ல் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகின்றேன். இந்த டிப்ஸ் எனது படிப்பு செலவிற்கு பெரிதும் பயன்படும்“ என கஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.