Loading...
அம்பாறை – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கட்டடத்தில் அத்துமீறி தங்கி இருந்த மாணவர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடத்தின் 5 மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் 20 பல்கலைக்கழக மாணவர்களக்கு வகுப்புத் தடைவிதிக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களும் பெற்றோர் சிலரும் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தில் அத்துமீறி தங்கி இருந்தனர்.
இதுதொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது.
இதனை அடுத்து நீதிமன்றம் விடுத்த உத்தரவுகளையும் மீறி 15 மாணவர்கள் தொடர்ந்தும் குறித்த கட்டடத்தில் தங்கி இருந்தனர்.
இந்தநிலையில் இன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...