Loading...
பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை ஊதியத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க முடியாது என்று முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அடிப்படை ஊதியமாக 600 ரூபாயையே வழங்க முடியும் என அந் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹோலியத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 500 ரூபாய்க்கும் அதிகமான வேதனம் தொழிலாளர்கள் வேலைக்கு சமுகம் தராவிட்டாலும் வழங்கப்படும்.ஆனால் தற்போது இருக்கின்ற நிலையில் வேதனத்தை பாரிய அளவில் அதிகரிக்க முடியாது.
தேயிலை விலையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக வேதனம் நிலவுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த முறை கூட்டு ஒப்பந்தம் செய்துக் கொண்ட போது, இலாபப்பகிர்வு முறைமையை நோக்கி நகர வேண்டும் என்பதில் இணக்கம் காணப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Loading...