வயிற்றுவலி காரணமாக மருத்துவமனை சென்ற மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை செவனகல – களுதியஹார பிரதேசத்தில் 16 வயதான பல்லி மாணவை ஒருவரே இவ்வாறு கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் குறித்த மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குறித்த மாணவியின் தாயார் மாணவியிடம் விசாரித்து பார்க்கையில் தனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறவே பொலிசார் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பொலிசாரின் விசாரனையில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த மாணவியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் கர்ப்பத்திற்கு மற்றுமொரு நபரும் காரணம் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
செவனகல பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.