Loading...
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
Loading...
இதன்போது உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதன் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர், இது தொடர்பில் மேலும் நான்கு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Loading...