புதுப்பொலிவு பெற்றுள்ள சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பனசுந்தரி நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நிகழ்ச்சியை நல்லபடியாகத் தான் தொகுத்து வழங்குகிறார்.
சொப்பன சுந்தரி நிகழ்ச்சி ஆபாசத்தின் உச்சமாக உள்ளது. அதில் வரும் மாடல் அழகிகள் குட்டி, குட்டியாக உடை அணிவதுடன் உணர்ச்சியை தூண்டும் வகையில் போஸ் கொடுக்கிறார்கள். கேட்டால், இது மாடலிங்கின் ஒரு அங்கம் என்பார்கள். ப்ரொமோ வீடியோக்கள் மிகவும் மோசமாக உள்ளன.
Do you take pride in hosting the #SoppanaSundari show.
I happened to see a woman demeaning pic of one of your models.
Do you even consider it a decent show to host.
One of the judges smirk at the fall of a model. How it’s a humane show— Prof. Minerva McGonagall (@Prof_Minerva1) October 20, 2018
பிரசன்னா என்றால் கொடுத்த கதாபாத்திரத்தில் நச்சென்று நடிப்பார் என்று பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி உங்களுக்கு வேண்டாம் பிரசன்னா, விலகி விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் பெருமை அடைகிறீர்களா பிரசன்னா என்று கூறி ஒருவர் விளாசியுள்ளார்.