26-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 9ம் திகதி, ஸபர் 16ம் திகதி, 26-10-2018 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 9:40 வரை; அதன் பின் திரிதியை திதி, பரணி நட்சத்திரம் காலை 10:51 வரை;
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி
பொது : கார்த்திகை விரதம், முருகன், மகாலட்சுமி வழிபாடு.
மேஷம்:
உறவினரின் பாசம் வியப்பைத் தரும். தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது.
ரிஷபம்:
நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட அபிவிருத்தி பணி நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித்தரும்.
மிதுனம்:
நண்பருக்கு சிறு அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.
கடகம்:
உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்க அனுகூலம் உண்டாகும். பெண்கள் விருந்து, விழாவில் ஆர்வமுடன் பங்கேற்பர்.
சிம்மம்:
மனதில் இருந்த கவலை தீரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை வளரும்.
கன்னி:
போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். லாபம் சுமார். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதிக்கவும். அரசியல்வாதிகள் நிதானமுடன் பேசுவது நல்லது.
துலாம்:
உங்களின் எதார்த்த பேச்சு மற்றவருக்கு சங்கடம் தரலாம். தொழில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். பிள்ளைகளால் நித்திரை தாமதமாகலாம்.
விருச்சிகம்:
புதியவர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும்.தொழில்,வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.
தனுசு:
அனைவரிடமும் பெருந்தன்மையுடன் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். உபரி வருமானம் கிடைக்கும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.
மகரம்:
சமூக நிகழ்வுகளால் புதிய அனுபவம் காண்பீர்கள். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும்.பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.
கும்பம்:
மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தாமதகதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.
மீனம்:
நண்பர்களால் இனிய அனுபவம் பெறுவீர்கள். உறவினரின் உதவி கிடைக்கும்.தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.