பெண்களுக்கு தனித்துவம் வேண்டுமென்று பெரியார் கூறினார், ஆனால் தற்போது மீடூ மூலம் நடக்கும் சில சேட்டைகளை பார்த்து தற்போது அவர் இருந்திந்தால், அப்படி ஒரு தனித்துவம் வேண்டாம் என்று கூறியிருப்பார் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
சினிமாவுக்கு நடிக்க வரும்போது, நடித்த தெரியுமா, நடனம் ஆடத்தெரியுமா என்றுதான் கேட்போம். ஒரு வேளை நாங்கள் கேட்காமல் விட்டது கன்னித்தன்மை பற்றிதான். ஆனால், இப்போது அதனையும் கேட்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
தயவுசெய்து சினிமாவில், இந்த மீடூ மூலம் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்காதீர்கள்.
வைரமுத்து மீது பாலியல் குற்றம்சாட்டியுள்ள சின்மயி, ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், சுவிட்சர்லாந்து சென்றபோது பயன்படுத்திய பாஸ்போர்ட் காணவில்லை, அதனை தேடிக்கொண்டிருப்பதாக கூறுவது முட்டாள்தனமாக இருக்கிறது.
சின்மயி எல்லோரையும் முட்டாளாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் பாஸ்போர்ட் வேண்டுமென்றால், நம்பரை தட்டினால் போதும் நமது அனைத்து விவரங்களும் வந்துவிடும். எந்த ஆண்டு சென்றீர்கள்? எந்த ஆண்டு கலாவதி ஆனது ஆகிய அனைத்து விவரங்களும் வந்துவிடும்.
நான் உனக்கு ஐடியா தருகிறேன், நீ பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று நம்பரை கொடு, அனைத்து விவரங்களும் கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.