Loading...
டெல்லியில் பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி அருகே உள்ள முக்மேல்பூரில் எம்சிடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. பள்ளிகூடத்தின் மேல்நிலை குடிநீர் தொட்டியை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்த போது மனித எலும்புக்கூடு மற்றும் எலும்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
Loading...
இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் அங்கு சென்று எலும்பு கூடை கைப்பற்றிய தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வக சோதனைக்கு பின்னரே அந்த எலும்புக்கூடு குறித்த கூடுதல் தகவல் தெரியவரும் என்று கூறியுள்ள பொலிசார், ஆசிரியர்கள்,மாணவர்கள், துப்புரவு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
Loading...