இன்ஸ்டாக்ராம் சமூக வலைதளத்தின் வழியாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்து அதனை இந்தோனேசிய பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சுரபயா நகரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது தளத்தில் என்ன பகிரப்படுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுடன் நல்ல முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தோனேசியாவில் இன்ஸ்டாக்ராம் உதவியின் மூலம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டன. சமூக வலை தளங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட குழந்தைகள் விற்பனை இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை 700 பேர் ஃபாலோ செய்துள்ளனர். குறிப்பாக முறையற்ற வகையில், திருமணம் செய்து கொள்ளாமல் பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு நாங்கள் என்றுமே எதிரானவர்கள். குழந்தைகள் விற்பனை செய்வதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பாலியல் தொழில் மூலமாக ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் பிறக்க வைக்கப்பட்டு அந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக ஐ.நா. வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.