அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் Fiji நாட்டில் உள்ள பல்கலைகழத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்
அந்த உரையின்போது, உலகில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்வி என்பது மிக முக்கியம். பல பெண்கள் இன்றுவரை கல்விக்காக சிரமங்களை எதிர்கொண்டுதான் மேல வந்திருக்கிறார்கள்.
அதில் நானும் ஒருத்தி, ஸ்காலர்ஷிப் உதவியுடன் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். பகுதி நேர வேலைபார்த்து கிடைத்த பணத்தில் தான் எனது பல்கலைக்கழக படிப்பை முடித்தேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்த உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் மெர்க்கலின் சகோதரி சமந்தா, மெர்க்கல் பொய் பேசுகிறார், அவளுக்கு தேவையான படிப்பு செலவை எனது தந்தைதான் செலுத்தினார்.
மழலையர் குழந்தை பள்ளியில் தொடங்கி பல்கலைக்கழக படிப்பை வரை அனைத்து செலவுகளையும் எனது தந்தைதான் பார்த்துக்கொண்டார். மெர்க்கல் அப்படி படிக்கும்போது பணம் சம்பாதித்தாலும் அதனை ஆடை மற்றும் பார்ட்டிகளுக்குதான் செலவழித்தார் என கூறியுள்ளார்.