Loading...
தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று காலை ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், இவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் இந்த போராட்டத்தை மேறகொண்டிருந்தோம் என தெரிவித்துள்ளனர்.
Loading...
Loading...