கொழும்பின் புறநகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மசாஜ் நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
ஜாஎல, எக்கல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட 3 விபச்சார விடுதிகள் களனி குற்ற விசாரணை பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதிகளில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதியின் ஆண் முகாமையாளர்கள் இருவர் மற்றும் பெண் முகாமையாளர் ஒருவரும், 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 38 வயதுடைய கம்பஹா, மினுவங்கொட, பியகம, தம்புத்தேகம, ரத்கம பொலன்நறுவை, நுவரெலியா, கதிர்காமம், அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
கைது செய்யப்பட்டவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.