Loading...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருப்பதாகவும் கூறியே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
மேலும் குறித்த இடமாற்றம், வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் பணிப்புரையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய பத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...