Loading...
எதிர்வரும் நவம்பர் மாதம் வடக்கின் அனைத்து பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆயத்தமாக வைத்திருப்பதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் வரை வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
இந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் என்பதுடன், 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...