நடிகை தனுஸ்ரீ தத்தா தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, இந்தி நடிகர் நானா படேகர் பல ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மி டூ மூலம் தெரிவித்திருந்தார். இதற்கு நானா படேகர் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார்.
இந்நிலையில், மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், “தனுஸ்ரீ தத்தா ஓரு லெஸ்பியன். 12 ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அவருக்கு ஆண்களை கண்டாலே ஆகாது.
இரவு நேர விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்று சென்ற போது, எனது வாயில் சிகரெட்டை திணித்து கொடுமை செய்தார். அவர் பெண்களை மட்டுமே இச்சைக்கு அழைப்பார். இதனை நீதிமன்றத்தில் கூறி உரிய தண்டனை வாங்கி கொடுப்பேன்” என பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.