சீனாவில் பெண் ஒருவர் நீண்ட நேரமாக தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் கை விரல்களை அசைக்க முடியாமல் தவித்தித்துள்ளார்.
பெண் ஒருவர் ஒரு வாரமாக பணியில் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நாட்களில் அவர் விடாமல் தனது செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். தூங்கும் நேரத்தில் மட்டுமே அவர் செல்போனை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து, அவர் தனது வலது கையில் பலத்த வழி ஏற்படுவதை உணர்ந்துள்ளார்.
மேலும், அவரது விரல்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியபடியே அப்படியே செயல் இழந்து நின்றது. அவரால் விரல்களை அசைக்க கூட முடியவில்லை.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை சென்றபோது தான், அந்த பெண் டெனோசைனோவிடிஸ் – தசைநார் சுற்றியுள்ள திரவம் நிரப்பப்பட்ட உறை அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது. அதாவது, தொடர்ந்து ஒரே அசைவுகளை விரல்களுக்கு தரும்போது இது போல பாதிப்புகள் ஏற்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, மருத்துவர்களால் அந்த பெண்ணின் நிலையை கையாள முடிந்தது. இதனால், தொடர்ந்து அந்த பெண்ணின் கை விரல்கள் இயல்பான இயக்கத்திற்கு திரும்பியது.
Woman using cellphone too much can't stretch her fingers
This woman from Changsha, Hunan can't stretch her fingers for using her cellphone too much.I immediately put down my phone?
Publiée par PearVideo sur Samedi 20 octobre 2018