தமிழ் சினிமாவில் விஜய்யை அண்ணா என அழைக்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே வேளையில் விஜய்க்கு உறவினர் வகையில் தம்பியாக நடிகர் விக்ராந்த் இருப்பதை சிலர் அறிவீர்கள்.
அதே போல விக்ராந்துக்கு சஞ்சீவ் என்ற தம்பி இருக்கிறாராம். விசயம் என்னவெனில் விஜய் சேதுபதியை தேடி இயக்குனர் ஒருவர் வந்து கதை சொல்லியிருக்கிறார்கள்.
அதை கேட்ட சேதுபதி இக்கதை சஞ்சீவ்க்கு மிக பொருத்தமாக இருக்கும். இப்படத்திற்கு நானே திரைக்கதை, வசனம் அமைத்து தருகிறேன் என கூறி ஓகே செய்துவிட்டாராம்.
இதை அறிந்த சஞ்சீவ் சேதுபதி இப்போதிருக்கும் பிசியான நேரத்தில் எப்படி இதெல்லாம் சாத்தியம் என யோசித்திருக்கிறார். ஆனால் விஜய் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வசனம், திரைக்கதையை அமைத்து கொடுத்துள்ளாராம்.
இதனால் சஞ்சீன் நானும் என் சகோதரர் விக்ராந்தும் விஜய் சேதுபதிக்கு நன்றி கடன் பட்டுளோம் என கூறியுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.