நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கருணாஸுக்கு தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்வதற்காக நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசினார். அதில் முதல்வரையே நான் அடிப்பேன் என்றும் போலீசுக்கு எதிராகவும் பேசினார் .
மேலும் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், கொலை செய்வேன் என்றும் கூட அவர் பேச்சில் சில கருத்துக்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. கைது செய்யப்பட்ட இவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கருணாஸுக்கு நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கருணாசுக்கு அளித்த நிபந்தனை ஜாமினில் 4 நாள் நிபந்தனைகள் விலக்கு அளிக்கப்படுவதாக எழும்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் 30 வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக விலக்கு அளித்தார்கள். தொகுதி மக்களை பல நாட்களாக பார்க்கவில்லை. அவர்களை பார்க்க கோரிக்கை வைத்திருந்தேன். அதனால் விலக்கு அளித்தார் என்று கருணாஸ் கூறியுள்ளார்.