கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவதற்காக சென்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார். எதற்காக? ஏன்? இதை படிங்க!!
கொடைக்கானல் அருகே உள்ள பி.எல்.செட்டு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. அவருக்கு வயது 25. கல்யாணம் ஆகி 2 வருடமாகிறது. ஆனால் எப்ப பார்த்தாலும் சண்டை.. சண்டை.. அதற்கு காரணம் சசிகுமாரின் நாசமா போன குடி!!
இவர் ஒரு முழு நேர குடிகாரர். அதனால்தான் தினமும் வீட்டில் இரண்டு பேருக்கும் தகராறு நடந்து கொண்டே இருக்கும். இப்படியே சண்டை, சச்சரவாய் குடும்பம் போய் கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் வெறுப்பாகிவிட்ட செல்வராணி, சசிகுமார் மேல் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டார்.
இதனால் வீடு வெறுமையாகி போனது. மனைவி வீட்டில் இல்லாததால் தவறை உணர்ந்தார் சசிகுமார். அதற்காக நல்லூர் காட்டு வளவு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு கிளம்பினார். அதற்காக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டார். எப்படியாவது பொண்டாட்டியை சமாதானப்படுத்தி கூட்டி வந்து விட வேண்டும் என்று நினைத்துகொண்டே போனார்.
அப்போது, செல்போனில் எடுத்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது தனது ஃபேஸ்புக்கில் திடீரென ஒரு போட்டோ இருப்பதை கண்டு ஷாக் ஆகிவிட்டார். காரணம், தன் மனைவிக்கு வேறு ஒரு இளைஞர் முத்தம் கொடுத்தது போன்ற போட்டோ அது. அந்த இளைஞர் இவர்கள் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்தவர்தான். அந்த போட்டாவை பார்க்க பார்க்க சசிகுமாரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.பஸ் சீட்டில் அதற்கு மேல் உட்காரகூட பிடிக்கவில்லை.
இதனால் கே.சி.பட்டி என்ற இடத்திலேயே பாதி வழியில் பஸ்சை விட்டு கீழே இறங்கிவிட்டார். பின்னர் அங்கிருக்கும் ஒரு கடைக்கு வேக வேகமாக சென்று பூச்சி மருந்தை வாங்கி மடக்கென்று குடித்து விட்டார். விஷம் குடித்த வேகத்திலேயே மாமனார் வீட்டுக்கு போனார். அங்கிருந்த மனைவியிடம் போட்டோ பற்றி கேட்டார்.
முதலில் அவர் மறுத்தாலும் பிறகு “ஆமாம்” என்று ஒத்து கொண்டார். இதைக் கேட்டதும், ஏற்கனவே விஷம் சாப்பிட்டுவிட்ட சசிகுமார் அப்படியே மயங்கி சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சென்றும், காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி சசிகுமார் இறந்துவிட்டார். இதுகுறித்து, தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.