முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச, பிரதமராக நியமிக்கப்பட்டமையடுத்து தென்னிலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் வெடிகொளுத்தி கொண்டாடப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆட்சி அமைத்து வந்தன.
இந்த நிலையில் கூட்டு அரசிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றிரவு திடீரென அறிவித்தது. சற்று நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்தச் செய்தி வெளியாகியதும் நாட்டின் பல பகுதிகள் வெடிகள் கொளுத்தி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர்.
இதேவேளை, யாழின் சில இடங்களிலும் வெடி கொளுத்தி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.