தனது நீண்ட நாள் நண்பன் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
எனவே மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் ஒருவர் காலமாகியிருந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையில் சிநேகப்பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதன் பின்னர் அண்மையில் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ பாரத பிரதமர் உள்ளிட்ட ப.ஜா.கவின் முக்கிய தலைவர்களை சந்தித்திருந்தார்.
இதன் போதும் சும்பமணியன் சுவாமியை சந்தித்த அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் இன்று மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 11 வது பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு சும்பமணியன் சுவாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.