பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பினும் அவர் தன் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க வேண்டும். அதே போல ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் பதவியை தொடர வேண்டும் என்றால் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.
இலங்கையில் மொத்தமாக உள்ள 225 பாராளுமன்ற ஆசனங்களில் ஐக்கிய தேசியக்கட்சி 105 இடங்களையும்
UPFA 96 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் ஏனைய கட்சிகள் 8 இடங்களையும் தற்போதைய நிலவரப்படி கொண்டுள்ளன.
இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தான் துருப்புச்சீட்டு உள்ளது. யார் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமானாலும் அவர்களுக்கு கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் ஆதரவு நிச்சயம் தேவை.
ஆகவே இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை சரியாக பயன்படுத்துமாக இருந்தால் தமிழர்களுக்கான தீர்வை பெறுவதற்கான வழியை சுலபப்படுத்திக்கொள்ளலாம்.
முடிந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சொல்வதைப் போல தீபாவளிக்கு முன் தீர்வுக்கு ரைபண்ணலாம். முயற்சி செய்வார சாணக்கியர் சம்பந்தன் ஐயா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.